10 வருடங்களின் பின் வீழ்ச்சியடைந்த போஞ்சி விலை
இலங்கையில் சுமார் பத்து வருடங்களின் பின்னர் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ போஞ்சியின் மொத்த விலை 47 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை குறைவடைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார நிலைய வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து வகையான மரக்கறி வகைகளின் விலைகளும் சடுதியாக குறைவடைந்துள்ளமையினால், மரக்கறிகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, புறக்கோட்டை நான்காம் குறுக்குத் தெரு மொத்த விற்பனை விலைப்பட்டியலின் இன்றைய (05) நிலவரம் பின்வருமாறு அமைகின்றது.
உருளைக்கிழங்கு விலை
நுவரெலியா உருளைக்கிழங்கு ஒரு கிலோ 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதுடன் பாகிஸ்தான் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 130 ரூபாய் முதல் 150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பாகிஸ்தான் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றதுடன் சீனா பெரிய வெங்காயம் ஒரு கிலோ 250 ரூபாய் முதல் 270 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறிய வெங்காயம்
இந்திய சிறிய வெங்காயம் கிலோ ஒன்று 200 ரூபாய் முதல் 260 ரூபாய் வரையும், யாழ்ப்பாண சிறிய வெங்காயம் கிலோ ஒன்று 200 ரூபாய் முதல் 300 ரூபாவிற்கும் விற்கப்படுகிறது.
அத்துடன் வெள்ளைப் பூடு கிலோ ஒன்று 450 ரூபாய் முதல் 470 ரூபாவாக இன்றைய மொத்த சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் ஏனைய மரக்கறிகளை விட போஞ்சி மிகக் குறைந்த விலையில் விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |