கோப்பாய் காவல் நிலையத்திற்கு அருகில் கைக்குண்டு மீட்பு (Photo)
police station
Grenade
Kopay
recovery
By Vanan
யாழ்ப்பாணம் - கோப்பாய் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றின் கூரை திருத்த வேலையின் போது , கூரைக்குள் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டின் கூரை திருத்த வேலைகளை, வேலையாட்களைக் கொண்டு, வீட்டின் உரிமையாளர் இன்றைய தினம் மேற்கொண்டிருந்தார்.
அதன் போது கூரையின் மேற்பகுதியில் கைக்குண்டு ஒன்று மறைத்து வைக்கப்பட்டு இருந்ததனை வேலையாட்கள் கண்ணுற்று உரிமையாளருக்கு தெரிவித்தனர்.
அதனை அடுத்து வீட்டின் உரிமையாளர் கோப்பாய் காவல்துறையினருக்கு அறிவித்ததனை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் கைக்குண்டை மீட்டதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்