யாழில் நிலத்தடி நீரை மாசுபடுத்தும் தனிநபரின் பொறுப்பற்ற செயற்பாடு -மக்கள் குற்றச்சாட்டு (படங்கள் இணைப்பு)
jaffna
caraje
water polution
By Sumithiran
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதி சந்தியில் இயங்கிவரும் தனியார் ஒருவரின் கராஜின் பொறுப்பற்ற செயற்பாட்டால் நிலத்தடி நீர் மாசடைவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இவ்வாறு தொடர்ந்தும் குறித்த நபர் செயற்படுவதால் எதிர்வரும் காலப்பகுதியில் பிரதேச நிலத்தடி நீர் குடிப்பதற்கு ஒவ்வாத நிலைமைக்கு தள்ளப்படும் அபாயம் உருவாகியுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் இதுவரை எவ்விதபலனும் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். குறித்த கராஜிலிருந்து 50மீற்றர் தொலைவில் யாழ் இந்து ஆரம்பபாடசாலை உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




