கொழும்பு துறைமுக நகரச் சட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்!
corona
colombo
sri lanka
people
press meet
By Shalini
கொவிட் தொற்றுநோயை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில் கொழும்பு துறைமுக நகரச் சட்டம் நிறைவேற்றப்படுவதை ஒத்திவைக்குமாறு கொழும்பு பேராயர் மற்றும் எல்லே குணவன்ச தேரர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எல்லே குணவன்ச தேரர் மற்றும் கொழும்பு பேராயர் இணைந்து கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தனர்.
இதில், மக்களை பாதிக்கும் மசோதா திடீரென நிறைவேற்றப்படக்கூடாது என்றும் மக்களின் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என்றும் எல்லே குணவன்ச தேரர் கூறினார்.
இந்த நேரத்தில் இருவருக்கு ஒன்றாக கதைத்துக்கொள்ள முடியாத நிலையில், இந்த சட்டமூலத்தை திடீரென அவசரமாக நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்ற சந்தேகம் இருப்பதாகவும் எல்லே குணவன்ச தேரர் கூறினார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்