அமெரிக்காவில் இனவெறி தாக்குதல் - மூன்று கறுப்பினத்தவர்கள் சுட்டுக் கொலை
அமெரிக்காவின் புளோரிடா ஜாக்சன்வில்லில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய இனவெறித் தாக்குதலில் மூன்று கறுப்பினத்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.அத்துடன் துப்பாக்கிதாரியும் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நகர ஆணையாளர் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி சூட்டை நடத்தியவர் வெள்ளையராகவும், 20 வயது மதிக்கத்தக்க வயதுடையவராக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் துப்பாக்கிதாரியால் கொல்லப்பட்டனர்.
இனவெறியால் உந்தப்பட்ட

மேயர் டோனா டீகன், இது இனவெறியால் உந்தப்பட்ட "வெறுப்பு நிறைந்த குற்றம்" என குறிப்பிட்டார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் - இன்னும் அதிகாரபூர்வமாக பெயரிடப்படாதவர் - இலகுரக அரை தானியங்கி துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கியை வைத்திருந்ததாக ஷெரிப் கூறினார்.
எழுதப்பட்ட கடிதங்கள்

அவர் தனியாக செயல்பட்டதாகவும், தற்கொலை செய்து கொள்ள நினைத்ததாகவும் கூறப்படுகிறது. அவர் தனது பெற்றோருடன் ஜாக்சன்வில்லின் கிளே கவுண்டியில் வசித்து வந்தார் மற்றும் ஒன்று அவரது பெற்றோருக்கும் மற்றொன்று ஊடகங்களுக்குமென. "கடிதங்களை எழுதியுள்ளார்",
துப்பாக்கிச் சூடு தொடர்பாக எஃப்.பி.ஐ சிவில் உரிமை விசாரணையைத் தொடங்கியுள்ளது, இது வெறுப்பு குற்றமாக கருதப்படுகிறது.