திருகோணமலையில் துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு!
Srilanka
police
Trincomalee
recovered
ammunition
Gun
By MKkamshan
திருகோணமலை - பாலையூற்று பகுதியில் துருப்பிடித்த நிலையில் துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
பாலையூற்று பூம்புகார் கிழக்கு பிரதேசத்தில் வசிக்கும் தனிநபர் ஒருவரின் காணியிலிருந்து நீர் வடிந்தோடுவதற்காக குழாய் பொருத்தும் நோக்கில் நேற்று (14) மாலை வெட்டப்பட்ட நிலத்திலிருந்தே குறித்த எஸ்.எம்.ஜி ரக துருப்பிடித்த துப்பாக்கி ஒன்றும் மூன்று மகசீன்களும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் அவ்வீட்டிற்க்கு வாடகைக்கு அமர்த்தப்பட்டதாகவும் குறித்த வீட்டின் உரிமையாளர் மேலதிக விசாரணைக்காக திருகோணமலை தலைமையக காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
