ஹக்கலை விபத்தால் ஏற்பட்ட பதற்றம்
நுவரெலியா, ஹக்கலை பிரதேசத்தில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட இருவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நுவரெலியா பகுதியில் இருந்து வெலிமடை பகுதியை நோக்கிச் சென்ற கார் ஒன்று அப்பகுதியில் வீதியால் சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் இருவரை மோதியுள்ளது.
இதன்போது, குறித்த இருவரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, குறித்த காரை வீதியில் கைவிட்டு அதன் சாரதி தப்பியோடியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை, அப்பகுதியில் பெருமளவானோர் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் ஒன்றை சுமார் 1 மணித்தியாலயம் முன்னெடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.