இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஹமாஸின் முக்கிய தளபதிகள்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் காலாண்டை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களால் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
கான் யூனிஸ் நகரத்தின் தெற்குப்பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பின் கட்டிடங்களில் நடத்திய வான்தாக்குதலில் 7 ஹமாஸினர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் நுக்பா பிரிவின் தளபதி அந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
முக்கிய தளபதிகள் கொலை
கான் யூனிஸில் சோதனையில் ஈடுபட்ட மற்றொரு இஸ்ரேல் இராணுவக்குழு ஹமாஸின் ஆயுதக் கிடங்கை அழித்ததாகத் தெரிவித்துள்ளது. அந்த கிடங்கில் ஏகே - 47 மற்றும் ஆர்பிஜி ரக ஆயுதங்கள் கிடைக்கப்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய காசாவில் மகாசி நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அதில் 7 பேர் நுக்பா பிரிவின் தளபதிகள் எனவும் தெரிவித்துள்ளனர்.
பழிவாங்கும் இஸ்ரேல்
மேலும், மகாசியில் இஸ்ரேல் ராணுவத்தினரின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இரண்டு தீவிரவாதிகளைக் கொன்றதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பு கடந்த ஒக்டோபர் மாதம் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கத்தோடு கடந்த மூன்று மாதங்களாக காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகிறது.
இந்த தாக்குதலில் இதுவரை 23,000த்திற்கு அதிகமான மக்களை இஸ்ரேல் கொலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |