அதிபயங்கர தாக்குதலுக்கு தயாராகும் ஹமாஸ்: திடுக்கிடும் தகவலை வெளியிட்ட இஸ்ரேல்
சயனைடு கலந்த ரசாயன வெடிகுண்டுகளை வீச ஹமாஸ் அமைப்பினர் திட்டமிட்டு உள்ளனர் என இஸ்ரேல் திடுக் தகவலை தெரிவித்துள்ளது.
காசா மீது தொடர்ந்து 17-வது நாளாக இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த மோதலில் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
காசாவிற்குள் தரைவழி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இஸ்ரேல் எல்லையில் வீரர்களை குவித்துள்ளது. இதையடுத்து ,வடக்கு காசாவில் இருந்து பொது மக்களை தெற்கு காசாவிற்கு செல்லுமாறு இஸ்ரேல் அறிவுறுத்தியது.
சயனைடு கலந்த ரசாயன வெடிகுண்டு
இலட்சக்கணக்கானோர் வடக்கு காசாவில் இருந்து வெளியேறினர். இதற்கிடையே தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றது.
இந்தநிலையில், சயனைடு கலந்த ரசாயன வெடிகுண்டுகளை வீச ஹமாஸ் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் அதிபர் ஈசாக் ஹெர்ஜோக் உறுதிப்படுத்தியுள்ளார்.
சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இது அல்-கொய்தாவை அடிப்படையாக கொண்டது. 2003-ம் ஆண்டு அந்த பயங்கரவாத அமைப்பு மேற்கொண்ட திட்டத்துடன் தொடர்புடையது.
நாங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்-கொய்தா மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புகளை எதிர்கொண்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.