உக்கிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்...! அவலநிலையில் காசா மக்கள்: ஐ.நா அதிர்ச்சித் தகவல்
ரஃபாவில் உள்ள பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், காசாவில் (gaza) பாதுகாப்பான இடம் என எதுவும் கிடையாது என ஐக்கிய நாடுகள் சபை (united nation) தெரிவித்திருக்கிறது.
இதனை பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. ஏஜென்சியின் (UNRWA) ஆணையர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்த கோரிகை
சில நாட்களுக்கு முன்னர் ஐ.நா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் (israil) வான்வழி தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இதுவரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா (USA) கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
இதற்கிடையில் போர் நிறுத்தம் கோரி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பலஸ்தீன ஆதரவு நாடுகள் கொண்டுவரும் தீர்மானங்களை, அமெரிக்காவும், பிரிட்டனும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இரத்து செய்து வருகிறது.
பலஸ்தீன மக்கள் தஞ்சம்
இந்நிலையில், போர் மத்திய கிழக்கு முழுவதும் பரவும் அபாயம் எழுந்திருக்கிறது. எகிப்துக்கும், பலஸ்தீனத்திற்கும் இடையே இருக்கும் எல்லை பகுதியான ரஃபாவில் இலட்சக்கணக்கான பலஸ்தீன மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
காசா உள்ளே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், பலஸ்தீன மக்கள் ரஃபா நோக்கி நகர்ந்தனர். தற்போது இந்தப் பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், “காசாவில் பாதுகாப்பான இடம் என சில இடங்கள் சொல்லப்படுகிறது. ஆனால், இதில் உண்மை கிடையாது. மக்களை திசை திருப்பவே சில தகவல்கள் பரப்பப்படுகின்றன.
காசாவில் எந்த இடமும் பாதுகாப்பானது கிடையாது என பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. ஏஜென்சியின் (UNRWA) ஆணையர் ஜெனரல் கவலையுடன் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |