கம்பஹாவில் கைக்குண்டுகள் மீட்பு
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
By Dhilak
கம்பஹா - வேயங்கொடை ஜயசூரிய பகுதியில் இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக வயங்கொடை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கட்டடம் ஒன்றில் நிர்மாணப் பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த தொழிலாளர்களால் இந்தக் கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்றும், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டுகள் தொடர்பான உண்மைகளை அத்தனகல்ல நீதிமன்றில் அறிக்கையிடவுள்ளதாகவும், அவற்றை செயலிழக்கச் செய்வதற்கு காவல்துறை விசேட அதிரடிப் படையினரை அழைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டுகள் எவ்வாறு இந்த இடத்திற்கு வந்தன என்பது தொடர்பில் வெயங்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்