யாழில் வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு : ஒருவர் அதிரடி கைது
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Theepan
யாழ்ப்பாணத்தில் சிறிய ரக கைத்துப்பாக்கி மற்றும் ஒரு தொகை கஞ்சாவை வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வல்வெட்டித்துறை பகுதியில் வீடொன்றில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டினை சோதனையிட்டனர்.
இதன்போது ஒரு தொகை கஞ்சாவும் சிறிய ரக கைத்துப்பாக்கி ஒன்றிணையும் மீட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
அதனை அடுத்து வீட்டில் இருந்த குடும்பஸ்தரை கைது செய்ததாகவும் வல்வெட்டித்துறை காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு 4 மணி நேரம் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி