வடக்கில் திறந்து வைக்கப்பட்ட அருவி ஆறு சுற்றுலா வலயம்
மடு (Madhu) பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குஞ்சுக்குளம் கிராமத்தில் அருவி ஆற்றுப்பகுதியில் அமைக்கப்பட்ட 'அருவி ஆறு சுற்றுலா வலயம்' திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (8) மன்னார் (Mannar) மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது அருவியாறு சுற்றுலா வலய பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டதுடன் தொங்கு பாலமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நாளாந்தம் சுற்றுலாப் பயணிகள்
குஞ்சுக்குளம் பகுதிக்கு வடக்கு மற்றும் நாட்டின் பல பாகங்கள் மற்றும் புலம்பெயர் நாடுகளில் இருந்து நாளாந்தம் சுற்றுலாப் பயணிகள் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலம் மற்றும் அருவி ஆறு ஆகியவற்றை பார்வையிடுவதற்காக வந்து செல்வது வழமை.
இந்நிலையில், வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு குறித்த சுற்றுலா வலயம் திறந்து வைக்கப்பட்ட அமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர் பத்திநாதன் மற்றும் வடமாகாண சுற்றுலாத்துறை திணைக்கள உத்தியோகத்தர்கள், நானாட்டான் பிரதேச சபை செயலாளர் மற்றும் அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
