அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் களமிறங்கவுள்ள ஹரீன்!
Anura Kumara Dissanayaka
Ranil Wickremesinghe
Harin Fernando
UNP
By Kanooshiya
அரசாங்கத்திற்கு எதிராக பொது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள "மாபெரும் மக்கள் குரல்" பேரணியில், ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பங்கேற்கவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேரணி எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ளது.
முதல் படி
அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் குரல்களைத் திரட்டுவதற்கான முதல் படியாக இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் பேரணியைத் தொடரந்து எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு வலுவான திட்டமாக தொடர்ந்து முன்னேறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது எதிர்க்கட்சிகளின் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி