சரத் வீரசேகரவை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கின்றார் ஹரின்
sri lanka
people
harin fernando
By Shalini
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுடன் பகிரங்க விவாதத்திற்கு தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) கவால் விட்டுள்ளார்.
இன்று (11) நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதை தெரிவித்தார்.
என் மீது சரத் வீரசேகர பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
காவல்துறையினருக்கு பயந்து நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்டார்.
ஆனால் நான் இருதய அறுவை சிகிச்சைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். வேண்டுமானால் என் மார்பகப் பகுதியை காட்டுகிறேன்.
இதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.