இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி : அமைச்சர் ஹரினுக்கு எதிராக பொங்கியெழும் தென்னிலங்கை
SJB
Tissa Attanayake
Sri Lanka
India
Harin Fernando
By Sumithiran
இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்திருப்பது மிகவும் பாரதூரமான விடயம் எனவும், அமைச்சரவை அமைச்சர் ஒருவர் இவ்வாறான அறிக்கையை வெளியிடுவதன் மூலம் இலங்கையின் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டின் இறையாண்மைக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் அந்த அறிக்கையை ஐக்கிய மக்கள் சக்தி வன்மையாகக் கண்டிப்பதாகவும் அத்தநாயக்க குறிப்பிட்டார்.
உடனடியாக வாபஸ் பெற வேண்டும்
இறையாண்மை கொண்ட நாடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என்ற கருத்தை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என கொழும்பில் இன்று (19) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி