மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் வட்டவலை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வட்டவலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாவலப்பிட்டி காவல் நிலைய பிரிவிற்கு உட்பட்ட வெலிகல பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய அந்தோனி டொமினிக் என்ற இளைஞனே உயிராழந்துள்ளார்.
தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் குறித்த இளைஞன், ஹட்டனிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற வேளை, வட்டவலை காவல் நிலைய பிரிவிற்கு உட்பட்ட கரேலினா பகுதியில் விபத்துக்குள்ளானர்.
விபத்துக்குள்ளான இளைஞன் வட்டவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருவதாக வட்டவலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.