மர்மமான முறையில் வனப்பகுதியில் உயிரிழந்த நபர்!
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் சிங்கமலை வனப்பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
அவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கொட்டகலை அந்தோனிமலை கே.ஜி.கே. பிரிவை சேர்ந்த நபர் ஒருவரே சடலமாக மீட்கபட்டதாகவும் குறித்த நபர் நேற்று காலை 11 மணியளவில் சிங்கமலை வனப் பகுதிக்கு விறகு சேகரிக்க சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் நேற்று முழுவதும் வீட்டுக்கு வராமையினால் உறவினர்கள் ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு பதிவு செயதனர். அதனையடுத்து பொலிஸார் மற்றும் பொது மக்கள் இணைந்து தேடுல் நடவடிக்கையில் ஈடுபட்ட போதே வனப்பகுதியில் இருந்து விறகு கட்டோடு சடலமும் மீட்கபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சடலமாக மீட்கபட்டவர் கொட்டகலை அந்தோனிமலை கே.ஜி.கே பிரிவை சேர்ந்த 65வயதுடைய 03 பிள்ளைகளின் தந்தையான எம்.மகேஸ்வரன் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.






