மழை வெள்ளத்தில் மூழ்கிய ஹட்டன் நகரம்
மலையகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஹட்டன் பிரதான பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
ஹட்டன் நகரின் பிரதான வீதியிலும் மழைநீர் தேங்கி நிற்பதால், போக்குவரத்து நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஹட்டன் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள காமினிபுர பகுதியிலிருந்து பேருந்து நிலையத்திற்குள் வரும் அதிக அளவு வெள்ள நீரானது தேங்கி நிற்பதால், அந்த இடத்தில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளதாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
பிரதான சாலையில் போக்குவரத்து தடை
தீபாவளி பண்டிகை காரணமாக தமது ஊர்களுக்கு சென்ற மக்கள் கொழும்பு உள்ளிட்ட பணிபுரியும் நகரங்களுக்கு திரும்ப ஆரம்பித்துள்ள நிலையில் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

இந்த சூழலில், இடைவிடாது பெய்த மழையால் தீபாவளி பண்டிகைக்காக தொலைதூர மாகாணங்களிலிருந்து ஹட்டன் நகருக்கு வந்த சில வணிகர்கள், தங்கள் கடைகளில் இருந்து குப்பைப் பைகளை அகற்றாததன் காரணமாக, மழைநீர் தேங்கி நிற்கும் பிரதான சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







