வட்டவல ஆடைத்தொழிற்சாலையில் அதிகரித்தது கொரோனா
Hatton
Watawala
SAILANKA
By Vasanth
ஹட்டனில் உள்ள வட்டவல ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அம்பகமுவ பொதுச் சுகாதார பரிசோதகர் காமதேவன் தெரிவித்தார்.
இதன்படி குறித்த ஆடைத் தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொழிற்சாலையில் பணிபுரியும் 600 ஊழியர்கள் அம்பகமுவ பிரதேச செயலக பிரிவில் உள்ள அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் தொழிற்சாலை மேலும் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி