இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் விமானப்படைத்தளபதி பலி
இஸ்ரேல் படையினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் விமானப்படைத்தளபதி கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் (IDF) செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலிலேயே இவர் கொலல்லப்பட்டதாக இஸ்ரேல் படையினர் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் மீதான தாக்குதலில் முக்கிய பங்கு
கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீதான தாக்குதலில் 1,300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதில் முராத் அபு முராத் முக்கிய பங்கு வகித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Furthermore, over the last day, IAF fighter jets struck operational headquarters used by the Hamas terrorist organization from which the terrorist organization's aerial activity was managed.
— Israeli Air Force (@IAFsite) October 14, 2023
உறுதிப்படுத்தாத ஹமாஸ்
இவரின் மரணத்தை ஹமாஸ் அமைப்பு உறுதிப்படுத்தவில்லை.
நேற்று(13) இரவு, இஸ்ரேலிய போர் விமானங்கள் காசா பகுதி முழுவதும் பரந்த அளவிலான தாக்குதல்களை நடத்தின. இதில் டசின் கணக்கான ஹமாஸ் இலக்குகள் மற்றும் காசா பகுதியில் ஒரு அரங்கில் இருந்த "நுக்பா" பயங்கரவாத செயல்பாட்டாளர்களும் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் படையினர் தெரிவித்துள்ளனர்.
Last night, IAF fighter jets conducted wide-scale strikes throughout the Gaza Strip. These included dozens of Hamas terror targets as well as “Nukhba” terrorist operatives that were in a staging ground in the Gaza Strip. pic.twitter.com/fmI7ilhya6
— Israeli Air Force (@IAFsite) October 14, 2023