கோர விபத்து - நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Accident
By Thulsi
மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் மாணவர்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். .
கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியின் திக்வெல்ல, பொல்கஹமுல்ல பகுதிக்கு அருகில் இன்று காலை ( 13) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மருத்துவமனையில் அனுமதி
மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து அம்பலாந்தோட்டை திசையிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த வேளையில், கதிர்காமம் நோக்கிப் பயணித்த லங்கம பேருந்துடன் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி