வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு
வவுனியா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றாவின் விளக்கமறியல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அதிபர் ரணில் விக்ரமசிங்க கடந்த 5 ஆம் திகதி வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டு நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னி மாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்ட நிலையில் அச்சங்கத்தின் தலைவி உட்பட இருவர் வவுனியா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
விளக்கமறியல் நீடிப்பு
கைதுசெய்யப்பட்டவர்கள் அன்றையதினம் மாலை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
இதன்போது சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா எதிர்வரும் 08ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், மற்றைய பெண் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்றையதினம் குறித்த வழக்கானது நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் சங்க தலைவிக்கு 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதியினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்....! |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 5 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
4 நாட்கள் முன்