கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட சுகாதார அமைச்சின் புதிய செயலாளர்
World Health Organization
Sri Lanka
Ministry of Health Sri Lanka
By Sathangani
சிறிலங்கா சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால இன்று (20) காலை தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவருக்கு முன்னர் சுகாதார அமைச்சின் செயலாளராக ஜனக ஸ்ரீ சந்திரகுப்த கடமையாற்றினார்.
புதிய செயலாளர் நியமனம்
அவர் ஓய்வுபெற்றுள்ள நிலையில் விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால கடந்த 17ஆம் திகதி புதிய செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இதற்கு முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியதோடு சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
இவர் 2019 ஆம் ஆண்டில், பாகிஸ்தானில் உலக சுகாதார அமைப்பின் (WHO) பிரதிநிதியாக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி