பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு தயாராகும் சுகாதார தொழிற்சங்கங்கள்
சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் அடுத்த மாதம் 9 ஆம் திகதி சுகாதாரத்துறையுடன் இணைந்த 16 தொழிற்சங்கங்கள் கலந்துகொள்ளவுள்ளதாக அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய (Saman Ratnapriya)தெரிவித்துள்ளார்.
“ஊழியர் சேவை நிலை, பதவி உயர்வு சுற்றறிக்கைகளை வழங்குதல் மற்றும் சுகாதார நிபுணர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவுகள் போன்ற கோரிக்கைகளை உடனடியாக அமுல்படுத்துமாறு சுகாதார அமைச்சுக்கு அழுத்தம் கொடுக்கிறோம்” என சமன் ரத்னபிரிய (Saman Ratnapriya) கூறியுள்ளார்
இதற்கு முன்னர் இம்மாதம் 18ஆம் திகதி சுகாதார அமைச்சருக்கு கடிதம் எழுதியதாகவும், தொழிற்சங்க நடவடிக்கையை தவிர்ப்பதற்காக ஒரு வாரத்திற்குள் பதில் அளிப்பதாக எதிர்பார்த்ததாகவும், ஆனால் இதுவரை உரியவர்களிடமிருந்து பதில் வரவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
“அரசாங்கத்திற்கு பொறுப்பு உள்ளது, சுகாதார அமைச்சருக்கு அடுத்த வாரத்திற்குள் இந்த பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய பொறுப்பு உள்ளது, இல்லையெனில் நாங்கள் 9 ஆம் தேதி தொழிற்சங்க நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.