வெளிநாடொன்றில் கடுமையான வெப்ப அலை: அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்!
Climate Change
Bangladesh
Weather
By Laksi
வங்காளதேசத்தில் (Bangladesh) கடந்த இரண்டு வாரங்களில் வெப்பம் தாங்க முடியாமல் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்காளதேசின் தென்மேற்கு பகுதியில் உள்ள மகுரா (Magura) மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது.
கடுமையான வெப்ப அலை
கடந்த சில வருடங்களாக இல்லாத வகையில் வங்காளதேசத்தின் பெரும்பாலான இடத்தில் வெப்ப அலை வீசி வருகிறது.
இதன் காரணமாக பாடசாலைகள், கல்லூரிகள், மதரஸா, தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் என அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சீரற்ற மழை மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வரும் ஆண்டுகளிலும் வங்காளதேசத்தில் அதிக வெப்ப அலை வீசும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி