டிட்வா சூறாவளியால் நாட்டில் 159 பேர் பலி! 203 பேர் மாயம்

Climate Change TN Weather Weather Floods In Sri Lanka Rain
By Thulsi Nov 30, 2025 02:40 AM GMT
Report

புதிய இணைப்பு 

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம் திகதி முதல் நேற்று இரவு 8 மணி வரை மொத் தம் 159 பேர் உயிரிழந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் 203 பேர் காணாமல் போயுள்ளனர் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

நேற்றிரவு  8 மணியளவில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

யாழில் சீரற்ற காலநிலை - நீரில் மூழ்கிய நல்லூர்: பறிபோன உயிர்

யாழில் சீரற்ற காலநிலை - நீரில் மூழ்கிய நல்லூர்: பறிபோன உயிர்

ஜந்தாம் இணைப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது.

டிட்வா சூறாவளியால் நாட்டில் 159 பேர் பலி! 203 பேர் மாயம் | Heavy Rain And Flood Death Toll In Sri Lanka Today

அத்துடன் 130 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

காணாமல் போனோரை மீட்கும் பணிகள் தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

யாழ். மக்களுக்கு வைத்தியர் சத்தியமூர்த்தியின் அவசர வேண்டுகோள்

யாழ். மக்களுக்கு வைத்தியர் சத்தியமூர்த்தியின் அவசர வேண்டுகோள்

நான்காம் இணைப்பு

டிட்வா' சூறாவளியால் ஏற்பட்ட மோசமான வானிலையைத் தொடர்ந்து 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 34 பேர் காணாமல் போயுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது.

டிட்வா சூறாவளியால் நாட்டில் 159 பேர் பலி! 203 பேர் மாயம் | Heavy Rain And Flood Death Toll In Sri Lanka Today

சூறாவளியால் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையால் 61,175 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 219,282 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் 266 பாதுகாப்பு முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன. இதில் 5,890 குடும்பங்களைச் சேர்ந்த 18,443 பேர் தங்கியுள்ளனர்.

களனி, களு ஆறு, யான் ஓயா, மகாவலி , தெதுரு ஓயா, மஹா ஓயா, கலா ஓயா, அத்தங்கலு ஓயா, மாணிக்க கங்கை ஆறு மல்வத்து ஓயா உட்பட பல முக்கிய ஆறுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மூன்றாம் இணைப்பு

கடந்த 72 மணி நேரத்தில் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 46 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது.

நவம்பர் 16 முதல் இன்றுவரை பதிவான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளதாகவும், 21 பேர் காணாமல் போயுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

இரண்டாம் இணைப்பு

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 39 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 79 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 1,158 குடும்பங்களைச் சேர்ந்த 4,008 பேர் மோசமான வானிலை காரணமாக பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

மடுல்சீமை பட்டாவத்த தோட்டத்தைச் சேர்ந்த வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்தமையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களுள் மூன்று வயது சிறுவன் மற்றும் தாய், சகோதரிகள் அடங்குவதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை, கண்டி கங்கொடவில் ஏற்பட்ட மண்சரிவில் மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. குறைந்தது 17 காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துமவ நிலயைம் தெரிவித்துள்ளது. 

அசாதாரணமான வானிலை

நாட்டில் நிலவும் அசாதாரணமான வானிலை காரணமாக இதுவரை 39 அனர்த்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

17 மாவட்டங்களில் உள்ள 79 பிரதேச செயலாளர் பிரிவுகள் இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

அப்பகுதிகளில் 1,158 குடும்பங்களைச் சேர்ந்த 4,008 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்த அனர்த்தங்கள் காரணமாக 10 பேர் காயமடைந்துள்ளதுடன், 41 குடும்பங்களைச் சேர்ந்த 131 பேர் 5 பாதுகாப்பு மையங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 136 குடும்பங்களைச் சேர்ந்த 472 பேர் தற்போது உறவினர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.  

இந்திய MI-17V5 உலங்கு வானூர்திகள் இலங்கைக்கு

இந்திய MI-17V5 உலங்கு வானூர்திகள் இலங்கைக்கு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025