யாழ். மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை! பல குடும்பங்கள் பாதிப்பு
கடந்த இரு தினங்களாக யாழ். மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளம் அனர்த்தத்தினால் 11 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரின் அனர்த்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கோப்பாய் பிரதேசத்தில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரும், பருத்தித்துறை பிரதேசத்தில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேரும், கரவெட்டி பிரதேசத்தில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 6 பேரும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வெள்ள அனர்த்தத்தினால் வீடுகளுக்கும் பகுதியளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
மின்னல் தாக்கம்
கோப்பாய் பிரதேசத்தில் 01 வீடும், பருத்தித்துறை பிரதேசத்தில் 7 வீடுகளும், கரவெட்டி பிரதேசத்தில் 01 வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மேலும், கரவெட்டி பிரதேசத்தில் மின்னல் தாக்கத்தினால் ஒருவர் காயமடைந்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |