வடக்கு கிழக்கு உட்பட பலபகுதிகளுக்கு பலத்த மழை : பேராசிரியர் பிரதீபராஜா எச்சரிக்கை

Eastern Province Northern Province of Sri Lanka Weather Rain
By Jaso Oct 18, 2026 02:56 PM GMT
Report

எதிர்வரும் 20.10.2026 அன்று முல்லைத்தீவுக்கு வட கிழக்கு திசையில் வடக்கு மாகாணத்தை அண்மித்து தற்காலிக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.

இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவலாக கிடைத்து வரும் மழை எதிர்வரும் 23.10.2026 வரை தொடரும் வாய்ப்புள்ளது என யாழ்பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் அந்தப்பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மத்திய வங்காள விரிகுடாவில் காற்றுச் சுழற்சி உருவாகும் வாய்ப்பு

எதிர்வரும் 23.10.2026 அன்று மத்திய வங்காள விரிகுடாவில் ஒரு காற்றுச் சுழற்சி உருவாகும் வாய்ப்புள்ளது. இது எதிர்வரும் 26.10.2026 அன்று ஒரு புயலாக மாற்றம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புயலாக மாற்றம் பெற்று எதிர்வரும் 29.10.2026 அன்று இரவு இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள ராம்பில்லி என்னும் இடத்திற்கருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ( இது இன்றைய(18) நிலையின் கணிப்பு... இதில் சிலவேளை சில மாற்றங்கள் நிகழலாம்... ).

வடக்கு கிழக்கு உட்பட பலபகுதிகளுக்கு பலத்த மழை : பேராசிரியர் பிரதீபராஜா எச்சரிக்கை | Heavy Rain Several Regions Including North East

இந்த புயலினால் இலங்கைக்கு நேரடியான பாதிப்புக்கள் இல்லையென்றாலும் இலங்கையின் பல பகுதிகளுக்கும் இக்காலத்தில் கனமழை முதல் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

கொட்டும் மழைக்கு மத்தியிலும் தொடரும் காணி விடுவிப்பு போராட்டம்

கொட்டும் மழைக்கு மத்தியிலும் தொடரும் காணி விடுவிப்பு போராட்டம்

பலபகுதிகளுக்கு பலத்த மழை

இந்த தாழமுக்கத்தினால் (புயலினால்) எதிர்வரும் 30.10.2026 வரை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, பதுளை, கொழும்பு, கேகாலை, களுத்துறை, கம்பகா, காலி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

வடக்கு கிழக்கு உட்பட பலபகுதிகளுக்கு பலத்த மழை : பேராசிரியர் பிரதீபராஜா எச்சரிக்கை | Heavy Rain Several Regions Including North East

குறிப்பாக வடக்கு, கிழக்கு, மத்திய மேற்கு மாகாணங்களுக்கு இக்காலப்பகுதியில் மிகக்கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே மத்திய, சப்ரகமுவா மற்றும் ஊவா மாகாணங்களுக்கு தொடர்ச்சியாக மழை கிடைத்து வருவதனால் எதிர்வரும் 26.10.2026 முதல் 29.10.2026 வரை கிடைக்கும் கனமழை இம்மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு நிகழ்வுகளை ஏற்படுத்தலாம்.

எனவே மத்திய, சப்ரகமுவா, ஊவா மாகாண மக்கள் மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் மிக அவதானமாக இருப்பது அவசியம்.

அதேவேளை இக்காலப்பகுதியில் (24.10.2026 - 30.10.2026) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளதனால் இம்மாகாணங்களின் தாழ்நிலப் பகுதிகளின் ஒரு சில இடங்களில் சிறிய அளவிலான வெள்ள நிலைமை ஏற்படும் வாய்ப்புள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மல்லாவிப் பகுதியில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் அட்டகாசம் : கட்டுப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை

மல்லாவிப் பகுதியில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் அட்டகாசம் : கட்டுப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை

கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

அதேவேளை எதிர்வரும் 25.10.2026 முதல் 30.10.2026 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். இது ஒரு புயல் என்பதனால் கடற்கொந்தளிப்பு மிக உயர்வாக இருக்கும் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

வடக்கு கிழக்கு உட்பட பலபகுதிகளுக்கு பலத்த மழை : பேராசிரியர் பிரதீபராஜா எச்சரிக்கை | Heavy Rain Several Regions Including North East

அதேவேளை எதிர்வரும் 23.10. 2026 அன்று அரபிக்கடலிலும் ஒரு காற்றுச் சுழற்சி உருவாகும் வாய்ப்புள்ளது. ஆனாலும் இது வலுப்பெறுவதற்கான நிலைமை தற்போது தோன்றவில்லை.  


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024