பலத்த மின்னலுடன் கூடிய கன மழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை
மேற்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களுக்கு பலத்த மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த எச்சரிக்கையானது, இன்று (02) இரவு 9.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாணம்
இதேவேளை, கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும், மற்றைய பகுதிகளில், மாலை அல்லது இரவில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தேவையான நடவடிக்கை
மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் 75 மிமீ மேல் வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.
இந்த நிலையில், மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 4 நாட்கள் முன்
