தொடரும் சீரற்ற காலநிலை : மரக்கறி விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்
நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
காய்கறி பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் தேவைக்கு ஏற்ற காய்கறிகள் சந்தையில் இல்லாததால் சில வகை காய்கறிகளின் விலை அதிகரித்து உள்ளதாக வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மரக்கறிகளின் விலை
ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூபாய் 800, தக்காளி ரூபாய் 400, பீன்ஸ் ரூபாய் 400 என விற்பனை செய்யப்படுவதாகவும் மற்றும் வரும் நாட்களில் காய்கறிகளின் விலை இன்னும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒப்பட்டளவில் நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மலைநாட்டில் வியாபாரிகள் வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பிரதேசங்களில் மரக்கறிகளின் விலை மிகவும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |