இடுக்கி மூணாறு அருகே கனமழை : இரண்டு பெரும் நிலச்சரிவுகள்
இடுக்கி மூணாறில் கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை செல்லும் பழைய அரசு கலைக்கல்லூரி அருகே, இரண்டு பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழக கேரளா எல்லையை இணைக்கும் இடுக்கியில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை கனமழையாக கொட்டி தீர்த்து வருகிறது.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு மூணாறு பழைய அரசு கலைக்கல்லூரி அருகே பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
நிலச்சரிவுகள்
நிலச்சரிவில், சரக்கு லாரி ஒன்று சிக்கிக்கொண்டது. லாரி ஓட்டுனரான மூணாறு அந்தோனியார் நகரை சேர்ந்த 58 வயதான கணேசன், லாரியில் இருந்து மீட்க பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையான இன்று அதிகாலை 5 மணியளவில், முதல் நாள் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு அருகிலேயே மற்றொரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
இடுக்கி மூணாறில் கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை செல்லும் பழைய அரசு கலைக்கல்லூரி அருகே, சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை என இரண்டு பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. தற்போது அதன் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டதாலும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் வீடுகள் எதுவும் இல்லாததாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக தெரவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
