செம்மணியில் சிறுவருடைய என்புக்கூடு உட்பட 09 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுப்பு!
செம்மணி மனித புதைகுழியிலிருந்து இரண்டு மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சிறுவருடைய என்புக்கூடு உட்பட 09 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 22 ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் (11-06-2026) வியாழக்கிழமை நடைபெற்றன.
இன்றைய அகழ்வின்போது 02 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் சிறுவருடைய என்புக்கூடு உட்பட 09 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
என்புக்கூடுகள் அடையாளம்
அதனடிப்படையில் 341 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 327 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை மனித என்புக்கூட்டுக் குவியல் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த என்புக்கூட்டுக் குவியல் இதுவரையிலான அகழ்வுப் பணிகளில் அடையாளப்படுத்தப்பட்ட மனித என்புக்கூட்டுக் குவியல்களில் 23 ஆவது குவியல் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |