தலைவர் பிரபா பரிமாறிய உணவு... பொட்டு –சூசையுடன் சந்திப்பு... உங்கள் பாரதிராஜா பேசுகிறேன் !
தமிழர் தாயகத்தில் எட்டு நாட்கள் தங்கியிருந்து தலைவரை நேரில் சந்தித்துப் பேசி அந்தச் சந்திப்பு குறித்தும் தலைவரின் ஆளுமை குறித்தும் பலமுறை பெருமிதத்துடன் பொதுமேடைகளில் பகிர்ந்த நினைவழியா நாட்களின் பதிவுடன் மண்வாசனை இயக்குநர் பாரதிராஜா தான் நேசித்த தனது பண்ணை வீட்டு மண்ணில் இன்று மாலை உதிரிப்பூக்களின் சொரிவுடன் மீளாத் துயிலுக்குச் சென்றார்.
அரசு முறை மரியாதையுடன் மண்வாசனைப் படைப்பாளியின் உடல் மண்ணுக்குள் போனது.
இந்தவேளை தமிழ் திரையுலகம் கொண்டாடும் இந்தக் கலைஞன் கொண்டாடித்தீர்த்த ஒரு தலைவராகத் தமிழர் தாயகத்தின் தேசியத்தலைவர் பிரபாகரன் இருந்தார்.
அவர் தமிழகத்திற்கு அப்பால் நேசித்த ஒரு தேசமாகத் தமிழர் தாயகம் இருந்தது. தாயகத்தில் தான் உணவருந்தும்போது பிரபாகரன் தனது கைகளால் உணவு பரிமாறிய அந்தத் தருணம் முதல் பொட்டு அம்மான், சூசை என மூத்த தளபதிகளுடன் நடந்த அந்தச் சந்திப்பு குறித்துப் பல மேடைகளில் நெகிழ்ச்சியுடன் அவர் நினைவுகூர்ந்தும் இருந்தார்.
உலகமே உற்றுநோக்கும் ஒரு தலைவர் எவ்வளவு எளிமையாக இருக்க முடியும் என்பதற்குத் தலைவர் பிரபாகரனே சாட்சி எனப் பல தடவைகள் சொன்ன அந்த இயக்குநர் இமயம் இன்று மண்ணுக்குள் துயில்கொண்டாலும் நினைவழியா நாட்கள் குறித்து அவர் பகிர்ந்த கருத்துகளுடன் வருகிறது இப்பதிவு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |