இந்திய கடற்பகுதியில் தொடரும் கடத்தல் - தொடர்ந்து கைதாகும் இலங்கையர்கள்
ஈரான் படகிலிருந்து மாற்றப்பட்ட கோடிக்கணக்கான பெறுமதியான போதைப்பொருட்களுடன் பயணித்த படகுடன் ஐந்து இலங்கையர்களை இந்திய கடலோர காவல்படைகைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
கொச்சி கடற்பரப்பில், பயணித்த நிலையிலேயே குறித்தஇலங்கை படகிலிருந்து சுமார் 340 கிலோ ஹெரோயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையிலேயே இந்த ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த போதைப்பொருள், சிவப்பு நிற ஈரானிய படகில் இருந்து இலங்கை படகுக்கு மாற்றப்பட்டதாக சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரவித்துள்ளனர்.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி, சர்வதேச சந்தையில் 1,750 கோடி இந்திய ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.