முல்லைத்தீவில் மாவீரர் நினைவேந்தல் ஏற்பாடு - காவல்துறையினர் இடையூறு (காணொளி)
Mullaitivu
Sri Lanka
By Kiruththikan
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் விசேடமாக அமைக்கப்பட்ட இடத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் அந்த இடத்திற்கான வளைவுகளை அமைக்க முற்பட்ட வேளை காவல்துறையினர் வருகை தந்து இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு காவல்த்துறை பிரிவுக்குட்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் வளைவுகளை அமைப்பதற்கு காவல்துறையினர் இடையூறு விளைவித்து வருகின்றனர்,

இருந்தபோதும் அவர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து துயிலுமில்ல வளைவுகள் அங்கே அமைக்கப்பட்டிருக்கிறது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி