இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அதிரடித் தாக்குதல் : 200 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் பதிலடி
இஸ்ரேலில்(Israel) உள்ள பல இராணுவ தளங்களை குறிவைத்து ஹிஸ்புல்லா (Hezbollah) 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதல் இஸ்ரேல் மீது இதுவரை இல்லாத அளிவிற்கு நடத்தப்பட்ட தாக்குதல் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்த ஏராளமான ஏவுகணைகள் மற்றும் வான்வழி இலக்குகள் இடைமறிக்கப்பட்டது என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது தாக்குதல்
இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து உடனடி தகவல் ஏதும் இல்ல என இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு பதிலடியாக லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹிஸ்புல்லா பதிலடி
நேற்று தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லாவின் மூன்று பிராந்தியங்களில் ஒன்றிற்கு தலைமை ஏற்ற முகமது நாமேஹ் நாசர் இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்டார்.
குறித்த சம்பவத்திற்கு பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பு இதுவரை இல்லாத அளவிற்கு ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |