அதிக கடனே பொருளாதார வங்குரோத்து நிலைக்கு காரணம் : சந்திரிக்கா
அதிக கடனே பொருளாதார வங்குரோத்து நிலைக்கு மற்றொரு காரணம் என முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
மேற்கத்தைய நாடுகளின் தேவை என்ன?
“எம்மை நசுக்கி, இல்லாமல் செய்து இந்து சமூத்திரத்தின் மூலோபாய நன்மைகளை பெற்றுக் கொள்ளவே மேற்கத்தைய நாடுகள் முயற்சிக்கின்றன.
தற்போது அந்த நாடுகள் பயன்படுத்தும் மூலோபாயங்கள் முன்னரை விட வேறுபட்டவை.
இன்று அவற்றை ஆக்கிரமிப்பு என கூறுவது இல்லை. அதனை கடன் வழங்குதல் என குறிப்பிடுகின்றனர்.
நிபந்தனைகள்
இரு நிபந்தனைகளுடன் கடன்கள் வழங்கப்படுகின்றன.
இந்த நிபந்தனைகள் இலகுவானதாக இருந்த போதிலும் அதனால் நாம் பொருளாதார ரீதியாக நசுக்கப்படுகின்றோம்.
அதற்கு மற்றுமொரு பெயரே அபிவிருத்திக்கான முதலீடு. அபிவிருத்திக்கான முதலீடுகள் இரண்டு வகைப்படும்.
ஒன்று மிகவும் தாராளமானவர்கள். இந்த தாராளமானவர்கள் அபிவிருத்திக்கு அதிக கடன்களை வழங்கி நாட்டை மேம்படுத்த உதவுகின்றனர்.
மற்றைய பிரிவினர் எமக்கு தேவையான நிதியை கோரிய உடனேயே வழங்குபவர்கள். இந்த கடனுக்கு அதிக வட்டி வீதம் அறவிடப்படுகிறது.
இதன் மூலம் அனைத்தையும் அபிவிருத்தி செய்ய சந்தர்ப்பம் கிடைத்த போதிலும் அவ்வாறான ஒன்று தேவையில்லை.
இதுவே பொருளாதார வங்குரோத்து நிலைக்கு மற்றொரு காரணமாகும். எமது சர்வதேச கொள்கைகளை உருவாக்கும் போது இது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
சர்வதேச அரங்கில் எமது கோட்பாடுகளுக்கு அமைய ஆற்றல் மிக்க அடையாளத்தை உருவாக்க வேண்டும்.
தேசிய வளங்களையும், பொருளாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும்.எமது கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்.” என்றார்.