உயர்தர இராணுவ சக்தி சிறிலங்காவில் உருவாக்கம்
சமகால பாதுகாப்பு இயக்கவியல், இயற்கை பேரழிவுகள், மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகள், தொற்றுநோய்கள், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அல்லது வேறு எந்த தேசிய அவசர நிலைகளையும் எதிர்கொள்ளும் செயலற்பாடுகளுக்கு ஒரு சக்தியாக உயர்தர இராணுவ படையணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் முன்னோக்கு வழி மூலோபாய 2020 - 2025 திட்டக் கொள்கையின் ஒரு அங்கமாகவே இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் அங்குரார்ப்பண நிகழ்வு சாலியபுர கஜபா படையணித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
இந்தப் புதிய படையணியானது 53 ஆவது படைப்பிரிவு , 58 ஆவது படைப்பிரிவு , கொமாண்டோ படையணி, சிறப்புப் படையணி பிரிகேட் , எயார் மொமைல் பிரிகேட் , காலாட்படை பிரிகேட் மற்றும் கிளிநொச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஏனைய படையணிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளதோடு, 'வேகம், சக்தி, தைரியம்' என்ற நோக்கக்கூற்றினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.