ஐரோப்பாவில் அதிக சம்பளம் வழங்கும் நாடு!
மக்கள் தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை தேடி பலர் பல்வேறு நாடுகளுக்கு குடிபெயர ஆரம்பித்துள்ளனர்.
எனினும், அதிக சம்பளத்தை வழங்கும் நாடுகளை தேடி செல்வதிலேயெ அதிகளவானோர் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதன்படி, அதிக சம்பளத்தை வழங்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு வேலை தேடி பலர் செல்வதாக தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
அதிக சம்பளம்
ஐரோப்பாவில் அதிக சம்பளத்தை வழங்கும் முதல் நாடாக லக்சம்பர்க் பதிவாகியுள்ளது.
இதனை தொடர்ந்து, ஸ்விட்சர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், நோர்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் பதிவாகியுள்ளன.
இதன்படி, குறித்த நாடுகள் 5 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகையை மாதாந்த சம்பளமாக பணியாளர்களுக்கு வழங்குகிறது.
லக்சம்பர்க்
சிறந்த கல்வி அறிவையுடைய மற்றும் தொழில் துறையில் அனுபவமிக்க பலர் லக்சம்பர்க்கில் தற்போது பணி புரிகின்றனர்.
அத்துடன், அனுபவமற்ற பலரும் இங்கு வேலைவாய்ப்புக்களை தேடி குடிபெயர்ந்துள்ளனர்.
இவ்வாறாக லக்சம்பர்க்குக்கு குடிபெயர்ந்த அனுபவிக்க தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் மூவாயிரத்து 85 யூரோக்களும் அனுபவமற்ற தொழிலாளர்களுக்கு இரண்டாயிரத்து 570 யூரோக்களும் சம்பளமாக வழங்கப்படுகிறது.
மாதாந்தம் 6 ஆயிரத்து860 யூரோக்களை சராசரி சம்பளமாக இங்கு பணிபுரிவோர் பெற்றுக் கொள்கின்றனர். இதன்படி, லக்சம்பர்க்கில் உள்ள மக்களுள் 70 வீதமானோர் வெளிநாட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்விட்சர்லாந்து
ஐரோப்பாவில் அதிக சம்பளத்தை வழங்கும் நாடுகளின் பட்டியலில் ஸ்விட்சர்லாந்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இதன்படி, அங்கு பணிபுரிவோருக்கு சுமார் 6 ஆயித்து 3 யூரோக்கள் மாதாந்த சம்பளமாக வழங்கப்படுகிறது.
டென்மார்க்
டென்மார்க்கில் வேலைவாய்ப்புக்காக குடிபெயர்வோர் சுமார் 5 ஆயிரத்து 988 யூரோக்களை மாதாந்த வருமானமாக ஈட்டுகிறார்கள்.
மருத்துவ துறை மற்றும் தொழில்நுட்ப துறையில் பணி புரிவோரக்கு குறித்த தொகை சம்பளமாக வழங்கப்படுகிறது.
பெல்ஜியம்
ஐரோப்பாவில் அதிக சம்பளத்தை வழங்கும் நாடுகளின் பட்டியலில் பெல்ஜியம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
இதன்படி, பெல்ஜியத்தில் பணிபுரிவோருக்கு 5 ஆயிரத்து 276 யூரோக்கள் மாதாந்த சம்பளமாக வழங்கப்படுகிறது.
நோர்வே
அத்துடன், நோர்வேயில் பணிபுரிவோருக்கு 5 ஆயிரத்து 112 யூரோக்கள் சம்பளமாக வழங்கப்படுகிறது.
ஐரோப்பாவில் அதிக சம்பளத்தை வழங்கும் நாடுகளின் பட்டியலில் நோர்வே ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளதுடன், அதிக தனிநபர் வருமானத்தை கொண்ட நாடுகளில் எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |