சிவன் கோவில் இடிந்து விழுந்து 9 பேர் பலி
இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் சம்மர்ஹில் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோயில் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பு, மழை வெள்ளம் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மீட்புப் பணி

சம்பவம் நடந்தபோது கோயிலில் 50 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்தில் தீயணைப்பு படையினர், மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவசியமின்றி வெளியில் வராதீர்

நிகழ்விடத்துக்கு நேரில் ஆய்வு செய்த முதல்வர் சுக்வீந்தர் சிங், "கோயில் இடிபாடுகளுக்குள் இன்னும் 20 முதல் 25 பேர் வரை சிக்கியுள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மிகமிக அவசியமின்றி வெளியில் வர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிலச்சரிவு அபாயப் பகுதிகள், ஆறுகள் உள்ள பக்கம் மக்கள் செல்ல வேண்டாம். மழை நின்றவுடன் சீரமைப்புப் பணிகள் தொடரும்.
சுதந்திர தின நிகழ்ச்சிகள்

நாளை சுதந்திர தின நிகழ்ச்சிகள் வழக்கம்போல் நடைபெறும் என்றாலும் கூட மக்களின் பாதுகாப்பே பிரதானம்" எனத் தெரிவித்தார்.