தமிழ் - சிங்கள மக்களிடையே வெடித்த மோதல் : இது தான் காரணமா..!
ஈழத் தமிழர்களின் வரலாற்றுத் தலைநகரமான திருகோணமலை மிக நீண்டகாலமாக சிங்கள பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்குட்படுத்தப்பட்டு அபகரிக்கப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே.
சிறிலங்காவை பொறுத்தவரை நிலங்களும் மலைகளும் காடுகளுகளும் கூட தமக்கே உரியது என்ற மகாவம்ச மனோநிலை கொண்ட தென்னிலங்கை சிங்களவர்களினதும் அவர்களது அரசியல் பிரமுகர்களின் திட்டமிட்ட நடவடிக்கையினால் ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலப்பகுதியானது பருத்தித்துறை முனை தொடங்கி அம்பாறையின் எல்லை கிராமங்கள் வரை விரிவுபடுத்தப்பட்டு இன்றுவரை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் உலகமெங்கிலும் பரந்துவாழும் ஈழத் தமிழர்கள் தங்களின் தலைநகரம் என்று கொண்டாடும் திருகோணமலை என்பதும் மிக மோசமான அபகரிப்புகளுக்கும் சிங்கள குடியேற்றங்களுக்கும் உட்பட்டதாகவே காணப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அப்பகுதியில் சிங்கள - தமிழ் மக்களுக்கிடையிலான மோதல் சம்பவம் பூதாகரமான ஒருவிடயமாக பார்க்கப்பட்டு வந்தது.
அம்பாந்தோட்டையிலிருந்து அழைத்துவரப்பட்டு தமிழர்களுக்கு சொந்தமான ஆலயக் காணியொன்றில் குடியமர்த்தப்பட்ட வஜிதபுர என்ற சிங்கள ஆக்கிரமிப்பு கிராமம் பற்றியும், அன்றைய நாளில் திருக்கடலூர் வாழ் தமிழர்கள் மீது அவர்கள் மேற்கொண்ட மூர்க்கத்தனமான தாக்குதல் சம்பவம் பற்றியும் விரிவான விபரங்களை பகிர்ந்து கொள்கிறது ஐபிசி தமிழின் இவ்வார நெற்றிக்கண்,
பகுதி - 1
பகுதி - 2
