தலைவரை தன்னுடன் சண்டைக்கு வரும்படி அழைத்த கருணா : அம்பலமான உண்மைகள்
உலகளவில் இன்றும் மெய்சிலிர்க்கும் வீரம் படைத்த தமிழினத்தின் மிகப்பெரிய சாபம் துரோகம் தான், நேருக்கு நேர் மோத தைரியமற்று எதிரிகளால் கையில் எடுக்கப்பட்ட கோழைத்தனமான ஆயுதம் தான் துரோகம்.
அந்த துரோகக்கறைக்கு மிகப்பெரிய அத்திவாரம் இட்ட முதல் கோழை கருணா என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
இறுதிப்போரில் வீர மரணம் அடைந்த நம் தமிழ் சமூகத்தின் உறவுகளுக்கு தெரியும் கருணாவின் கெடுபிடிகளும் நரித் தந்திரங்களும்.
ஆனால், அண்மைக்காலமாக வளர்ந்து வரும் தமிழ் சமூகத்தினரிடையே சில தமிழினத் துரோகிகள், கருணா குறித்த மாயையை திட்டமிட்டு பரப்பி மேடை நாடகமாடி வருகின்றனர்.
அந்த திட்டமிட்ட மாயை திரையை கிழித்து கருணாவின் வரலாற்றையும் துரோகத்தின் பாதையையும் தற்போதைய சமூகத்திற்கு திரையிட்டு காட்டுகின்றது ஐபிசி தமிழின் உண்மைகள் நிகழச்சி.
இதன் தொடர்ச்சியாக, ஒரு காலத்தில் கருணாவிற்கு விசுவாசமாக கருணாவை தனது இதயத்தில் வைத்து பூஜித்து கருணாவின் துரோகம் பற்றி அறிந்த மறு கணமே அதனை முறியடிக்க களத்தில் இறங்கிய ஒரு கிழக்கு மாகாண போராளியுடன் கருணா பற்றிய உண்மைகளை மக்களுக்கு வெளிச்சமிட்டு காட்ட வருகின்றது உண்மைகள் நிகழச்சியின் மூன்றாம் பாகம்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
