டேன் பிரியசாத் படுகொலையில் திருப்பம் : சிக்கிய முக்கிய புள்ளி
டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
“நவ சிங்கள தேசிய இயக்கத்தின்” ஒருங்கிணைப்பாளரான டேன் பிரியசாத் செவ்வாய்க்கிழமை (22) மாலை வெல்லம்பிட்டியில் உள்ள ‘லக்சந்த சேவன’ வீட்டு வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் காயங்களின் தீவிரம் காரணமாக சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு
டேன் பிரியசாத் மார்பில் இரண்டு முறை மற்றும் தோளில் இரண்டு முறை என நான்கு முறை சுடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அத்துடன் சம்பவத்தின் போது சிறிய காயங்களுக்கு ஆளான மற்றொரு நபரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள், துப்பாக்கிச் சூடுகளை நடத்திவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
