போர் தொடுக்க முற்பட்டால் அழிவை சந்திக்க நேரிடும்: ஹிஸ்புல்லாவை மிரட்டும் இஸ்ரேல்
இஸ்ரேலுடன் போர் தொடுக்க முற்பட்டால் அதுதான் ஹிஸ்புல்லாவின் மிகப் பெரிய தவறாகும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
காசா மீது தொடர்ந்து 17 ஆவது நாளாக இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த மோதலில் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
காசாவிற்குள் தரைவழி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இஸ்ரேல் எல்லையில் வீரர்களை குவித்துள்ளது.'
இதையடுத்து ,வடக்கு காசாவில் இருந்து பொது மக்களை தெற்கு காசாவிற்கு செல்லுமாறு இஸ்ரேல் அறிவுறுத்தியது. இலட்சக்கணக்கானோர் வடக்கு காசாவில் இருந்து வெளியேறினர்.
ஹிஸ்புல்லாவின் மிகப் பெரிய தவறு
இதற்கிடையே தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றது.
இந்நிலையில், இஸ்ரேலுடன் போர் தொடுக்க முற்பட்டால் அதுதான் ஹிஸ்புல்லாவின் மிகப் பெரிய தவறாகும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நேதன்யாகு கூறுகையில், தற்போது ஹிஸ்புல்லா அமைப்பு போரில் முழுமையாக ஈடுபடுமா என்பதை என்னால் கணிக்க முடியாது.
ஹிஸ்புல்லா அவ்வாறு முடிவெடுத்தால், அது வருத்தப்படும். ஹிஸ்புல்லா அமைப்பை நினைத்துக்கூட பார்க்க முடியாத சக்தியுடன் நாங்கள் தாக்குவோம். அது ஹிஸ்புல்லா மற்றும் லெபனான் அரசு ஆகிய இரண்டிற்கும் அழிவை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.