மாகாண சபைத் தேர்தல் குறித்து அரச தரப்பின் அறிவிப்பு
இலங்கையின் மாகாண சபைத் தேர்தலை முடிந்தவரை விரைவாக நடத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அனைத்து தேர்தல்களையும் உரிய காலக்கட்டத்தில் நடத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து விளக்கமளிக்கும் நோக்கில், நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுடன் நேற்று (06) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்தப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”நாட்டில் நடைபெற வேண்டிய அனைத்து தேர்தல்களும் ஜனநாயக நடைமுறைகளுக்கு அமைவாக உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.

அதன்பிரகாரம் மாகாண சபைத் தேர்தலை பிற்போடும் எந்தவொரு என்னமும் அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, உரிய சட்ட நடவடிக்கைகளின் பின்னர் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்தார்.
இதேவேளை மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என நேற்றுமுன்தினம் (05) இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |