இலங்கை இராணுவத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 7000 பேர்
விடுமுறை அனுமதியின்றி கடமைக்கு சமூகமளிக்காத 7,000 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பொது மன்னிப்புக் காலத்தின் முதல் வாரத்தில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
விடுமுறை அனுமதியின்றி கடமைக்கு சமூகமளிக்காத இலங்கை இராணுவத்தின் அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவிகளுக்கு ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பொது மன்னிப்புக் காலத்தின் முதல் வாரத்தில் இராணுவத்தில் இருந்து 7,156 பேர் விலகியுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சட்டப்பூர்வமாக வெளியேற்றம்
அத்தோடு, 7,143 இராணுவ வீரர்கள் தங்களது ரெஜிமென்ட் மையங்களில் இருந்து தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தற்போது விடுமுறை அனுமதியின்றி வெளிநாட்டில் இருக்கும் 13 இராணுவ வீரர்களும் சட்டப்பூர்வமாக சேவையை விட்டு வெளியேற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தலைமையகம் அறிவித்துள்ளது.
மேலும், இந்த பொது மன்னிப்பு காலம் மே மாதம் 20 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |