இணையத்தளம் ஊடாக முறைப்பாடுகள்: காவல்துறையினரின் முக்கிய அறிவித்தல்
பொதுமக்கள் மேற்கொள்ளும் முறைப்பாடுகளை இணையத்தளம் ஊடாக பதிவு செய்யும் புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக காவல்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம், பொதுமக்கள் இனிவரும் காலங்களில் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்காக காவல் நிலையங்களை தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லையென அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்குப் பதிலாக இணையத்தளம் ஊடாக காவல்துறை முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தளம்
அதன் பின்னர், முறைப்பாடு தொடர்பான மேலதிக விசாரணைக்காக உரிய காவல் நிலையத்தில் உள்ள உத்தியோகத்தர்கள் குழு, முறைப்பாட்டாளர் தொடர்பில் தகவலறிய அவரது முகவரிக்கே வருகைத் தருவார்களென குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் கொழும்பு மாவட்டத்தின் 24 காவல் நிலையங்களில் இந்த நடவடிக்கை பரீட்சார்த்த முறையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல்துறை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் அதனை நாடு முழுவதும் விஸ்தரிப்பதாக காவல்துறை திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |