பாடசாலைகளுக்கு விடுமுறையா? வெளியான அறிவிப்பு
Education
People
schools
SriLanka
Power Cut
Holidays
Janaka Ratnayake
By Chanakyan
எதிர்வரும் திங்கட்கிழமை முதல், பாடசாலைகளுக்கு விடுமுறையை அறிவிக்குமாறு கல்வி அமைச்சுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இம்மாதம் 9 ஆம் திகதி பாடசாலைகளுக்கு தவணை விடுமுறை விடப்படவுள்ள நிலையில், அந்த விடுமுறையை முன்கூட்டியே நடைமுறைப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால், இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க (Janaka Ratnayake) தெரிவித்துள்ளார்.
நீண்ட மின் தடை காரணமாக பாடசாலை மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளமையினால் இவ்வாறு பரிந்துரை முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்