இயற்கையான முறையில் வீட்டிலேயே பேஷியல் : இலகுவான வழி இதோ !
பலர் தங்களை அழகாக்கி கொள்வதற்காக அழகு சாதன நிலையங்களுக்கு சென்று ஃபேஷியல் செய்து பார்க்கிறார்கள்.
இந்தநிலையில், அழகு சாதன நிலையங்களில் செய்யப்படும் ஃபேஷியல்களில் டைமண்ட் ஃபேஷியல் மிகவும் விலை உயர்ந்ததாகவுள்ள நிலையில் இந்த நன்மை பயக்கும் ஃபேஷியலை வீட்டிலேயே செய்யலாம்.
இதற்கு சிறிது புளிப்பு தயிர் தேவைப்படுவதுடன் ஃபேசியலுக்கு முதலில் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
கரும்புள்ளிகள்
தயிரை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து ஐந்து நிமிடம் கழித்து கழுவவும் அடுத்தது ஸ்க்ரப்பிங் பேக் பேட வேண்டும்.
இதற்கும் மிக முக்கியமான மூலப்பொருள் தயிர்தான் இந்த பேக் எந்த வகையான சருமத்திற்கும் பயன்படுத்தப்படலாம் தயிரில் சிறிது சர்க்கரை மற்றும் காபி பவுடர் கலந்து முகத்தில் தடவி மெதுவாக ஸ்கரப் செய்யவும்.
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை போக்க இந்த ஸ்க்ரப் மிகவும் நல்லது அத்தோடு மூக்கின் ஓரங்கள் முதலியவற்றை நன்கு தேய்க்க வேண்டும்.
மென்மையான சருமம்
இப்படி செய்வதால் முகம் மென்மையாக மாறும் அதை கழுவ வேண்டும் அத்தோடு தக்காளி கூழ் மற்றும் தயிர் கலந்து முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்யவும்.
இதை 10 தொடக்கம் 15 நிமிடங்கள் செய்தால் சருமத்தை பொலிவாக்க இது மிகவும் நல்லது அத்தோடு தக்காளி சருமத்தை வெண்மையாக்க மிகவும் நல்லது.
இதையடுத்து, 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி முகம் பளபளப்பதற்காக வைட்டமின் ஈ மாத்திரைகளை முகத்தில் தடவ வேண்டும் அத்தோடு சிறிது நேரம் கழித்து அதனை கழுவி விட வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |